நான் சிறியவனாக இருந்த கால கட்டத்தில் என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன் தேவதை கதைகளை
தேவதைகள் எப்போதும் சொர்க்கத்தில் இருப்பர்கலென்று
தேவதைகள் சுற்றி எப்போதும் சுகந்த மணம் வீசுமென்று
தேவதைகளை நாம் பார்க்க முடியாது, தொட முடியாது, பேச முடியாது, என்று
- இன்னும் எவ்வளவோ சொன்னார்கள். நான் சிறுவனாக இருந்ததால் என்னை ஏமாற்றி விட்டார்கள் போலும்.
ஏனென்றால் இவை அனைத்தும் என் மனைவிக்கு பொருந்துகிறதே!
Monday, February 21, 2011
Saturday, February 19, 2011
அன்றொரு நாள் என் மகனும் மனைவியும்
என் மனைவிக்கும் மகனுக்கும் ஒரு நாள் பெரும் வாக்கு வாதம். அது பிடிவாதமாக மாறியது.
ஆத்திரமும் கோபமும் கொப்புல்லிக்க, என் மகன் செய்த ஆர்பாட்டத்திற்கு அளவே இல்லை. தன் சிறு கைகளால் அவளை அடித்துக்கொண்டும், தலையால் இடித்துக்கொண்டும்.. அவனை சமாதான படுத்த பெரும் பாடாகி விட்டது.
அந்த காட்சியை காண கண் கோடி வேண்டும்.
அதனால் எண்ணிலடங்கா நன்றி சொல்வேன் அரங்கனிடத்தில்,
ஒரு சொர்கத்தை எனக்கு அளித்ததற்காக.

Tuesday, February 15, 2011
என் மகன்
துவண்டு போனான் என் மகன்
அதனால் துவண்டு போனது என் உள்ளம்
நன்றாக ஓடி ஆடி கொண்டிருந்த என் மகன், இரண்டு நாள் முன்பு காய்ச்சலால் படுத்த படுக்கையாக கிடந்தான்.
திறக்க வில்லை அந்த ஒளி மயமான பேசும் கண்களை.
உள்ளம் பதைபதைபதக்க ஓடினேன் மருத்துவரை நோக்கி.
பசி இல்லை. உறக்கமில்லை. வேறு எந்த நினைவும் எனக்கு தெரிந்த வரை வரவில்லை. என் மகனின் பிஞ்சு கைகளில் ஏற்றினார்கள் மருந்து ஊசியை. அவன் அழுத அழுகையால் கிழிந்தது என் உள்ளம்.
அதை எடுக்க இரண்டு நாள் ஆகுமென்று சொன்னார்கள் மருத்துவ ஆலோசகர்கள். அதுவரை க்ளுகோஸ் ஏற்ற வேண்டும் என்றார்கள்.
எனக்குள் எப்போதும் இருந்த துணிவின் துணையை தேடினேன் - எங்கு போனதோ?
மனதுக்குள் அழுதேன்
மனதுக்குள் அரற்றினேன்
மனதுக்குள் கதறினேன்
அரங்கனை சாடினேன் - உன் உள்ளம் என்ன கல்லால் ஆனதா என்று.
என் உள்ளக்குமுறல் கேட்டிருக்குமோ என்னவோ அந்த அரங்கநாதனுக்கு, இரண்டு நாள் சென்றது. என்னுடைய ஸ்ரீவத்சன் என்னை பார்த்து புன்னகைத்து, மிக மெதுவாக "தா தா" என்றனது. அந்த பிஞ்சின் மழலையால் எனது உள்ளத்தில் பூத்த அமைதிக்கு முன் எந்த வியாக்கியானமும் செல்லாது.
அந்த அமைதிக்கு அளவேது?
கண்களில் நீர் வழிய உச்சி முகர்ந்தேன் என் செல்ல மகனை.
இதற்க்கு முன் இந்த உணர்சிகளை சத்தியமாக அனுபவித்ததில்லை.
இதை தான் ரத்த பாசம் என்பார்களோ.

Subscribe to:
Posts (Atom)